எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்லேரிப்பட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

Friday, February 28, 2020




 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் ,கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.பின்னர் அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ்  தேசிய அறிவியல் தினம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார் சர்.சி.வி ராமன் அவர்கள் ராமன் விளைவை கண்டு பிடிக்கப்பட்ட தினமே தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது நோபல் பரிசு வென்ற முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றவரும் இவரே
"ஒளி ஒரு பொருளின் வழியே செல்லும்போது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றமே' இராமன் விளைவு ஆகும்.
இக் கண்டுபிடிப்பு பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் போன்ற துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு கலை இளநிலைப் பட்டம் பெற்றார்.
1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
முதன்முதலில் இந்திய அரசு நிதித் துறையில் துறை கணக்காயராக பணியில் சேர்ந்தார்.
பணியில் இருக்கும்போதே கொல்கத்தா அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வந்தார்.
இவருக்கு ஆங்கிலேய அரசு, 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கியது.
மேலும் 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு,
1954-இல் வழங்கப்பட்ட பாரதரத்னா விருது,
1957-இல் வழங்கப்பட்ட லெனின் அமைதிப் பரிசு போன்றவை
சர்.சி.வி.இராமனைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.
இது அவருக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும்.
படிக்கும் மாணவர்கள் தெளிவான அறிவியல் சிந்தனையோடு புதிய புதியகண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க சர்.சி.வி.இராமனின் உழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்




No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One