எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினம் ஒரு புத்தகம் - "கால் முளைத்த கதைகள்"

Friday, February 14, 2020




"கால் முளைத்த கதைகள்"

எஸ்.ரா அவர்கள் எழுதிய நூல் வரிசை பட்டியலில் இப்புத்தகம் குழந்தைகள் நூல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.ஆனால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இப்புத்தகத்தை படிக்கலாம்.

கதைகள் யாருக்கு தான் பிடிக்காது???🙂

புத்தகத்தின் உள்ளே எண்பது கதைகள்.ஒரு பக்க அளவில் தான் ஒவ்வொரு கதையும் உள்ளது.எளிதில் படித்து விடலாம்.இயற்கை குறித்த அறிதலை அறிய பல நாடுகளில் சொல்லப்பட்டு வருகின்ற வாய்மொழி கதைகளின் தொகுப்பு.

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
மனிதர்கள் எப்படி தோன்றினார்கள்?
கண்ணீர் எப்படி உருவானது?
சிவப்பு சோளம் எப்படி உருவானது?

பல எண்ணற்ற தலைப்புகளில் பல்வேறு நாடுகளில் சொல்லப்பட்டு வரும் வாய்மொழி கதைகள் நம்மை வியப்பிலும் கொஞ்சம் நேரம் நம்மை "ஓ" இப்படியாகவும் இவை இருக்குமோ? என்று யோசிக்க செய்யவும் வைக்கின்றது.

ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அக்கதைகள் சொல்லப்பட்டு வருகின்ற நாடுகளின் பெயரையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

சூரியன் ஆணா?பெண்ணா? என்ற கதையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சூரியனை ஆண்தெய்வமாக போற்றி வருகின்றனர் எனவும் ஆந்திர மாநிலத்திலுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் சூரியனைப் பெண்ணாக வழிபடும் பழங்குடியினர்‌ இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.

தமிழகம் மற்றும்  கொல்லிமலையில் கூறப்பட்டு வரும் இரண்டு கதைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.ஏன் இதை குறிப்பிட்டு சொல்கின்றேன் என்றால் பல்வேறு கதைகளில் உலக நாடுகளின் பெயர்களை பார்த்த கண்களுக்கு நம்மூர் பெயர்களை கொண்ட கதைகளை படித்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்.

பதிப்பகம் : தேசாந்திரி.

பக்கங்கள் : 95

விலை : 100/-

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One