இப்படியும் சில மனிதர்கள் !
பணி ஓய்வு பெற்ற பிறகு நாமெல்லாம் என்ன செய்வோம்?
சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை ஏதாவதொரு வங்கியில் பாதுகாப்பாக முதலீடு செய்து விட்டு சிவனே என்று சோம்பி படுத்திருப்போம்
இல்லை என்றால் கோயில் கோயிலாக சுற்றித் திரிந்து போகும் வழிக்கு புண்ணியம் சேர்த்திருப்போம்.
ஆனால் இங்கே ஒருவர் கிராமம் கிராமமாக சுற்றி வருகிறார். அரசுப் பள்ளி ஒவ்வொன்றாக நாடி வருகிறார்.
தனது ஓய்வூதியப் பணத்தில் மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னால் முடிந்த பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்கிறார்.
சென்னையில் இருந்து இன்று எங்கள் அகரம் காலனி பள்ளிக்கு வந்திருந்த ஐயா திரு. ரங்கராஜன் ஸ்ரீதர்அவர்களின் வருகையால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம்.
பொதுமக்களிடமும் மாணவர்களுடனும் அளவளாவி மகிழ்ந்த அந்த நல்லுள்ளம் வழங்கிய பரிசுகளால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வகுப்பறை ஒன்றுக்கு டைல்ஸ் பதித்துத் தருகிறேன் என்ற வாக்குறுதியை வழங்கி மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
இப்பெருமகனாரை எங்கள் பள்ளிக்கு அறிமுகம்செய்து அழைத்து வந்த அன்பாசிரியை திருமதி. சசிகலா மற்றும் அவரின் இணையர் நண்பர் திரு.இலங்கேசன் அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்!!
இவர் போன்று அரசுப்பள்ளிகளை காத்து நிற்போர் இருக்கும் வரை நம் பள்ளிகளுக்கு என்ன கவலை?
தொடரட்டும் அன்னாரது அறப்பணி!!
No comments:
Post a Comment