குல்கந்து, பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்து ஆகும். இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, உடலின் நாற்றங்கள், தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். எளிதில் தயாரிக்கப்படும் இது சிறந்த ஆயுர்வேத மருந்துகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக பிரச்சனைகள் இருக்கும் பாசத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.
#உடல்துர்நாற்றம்
அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது நாற்றம் போக்க குல்கந்து மிகவும் உதவியாக இருக்கும். அது வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. இதனால் இதை வெயில் காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது.
#வாய்ப்புண்
குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வாய் புண் உருவாவதை குறைகிறது, மற்றும் வாய் புண்கள் காரணமாக வாயில் வரும் எரிச்சல் உணர்வு மற்றும் வலி குறைக்க உதவுகிறது.
#மலச்சிக்கல்
இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு மலச்சிக்கல் இருந்தால், எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் எந்த மாதத்திலும் இது பயன்படுத்தப்படலாம்.
#தோல்
இது தோல் எரிச்சலை கட்டுப்படுத்தி அதன் அறிகுறியைக் குறைக்க உதவுகிறது. மேலும் பருக்கள், கறைகள் போன்ற தோற்றத்தை சரிசெய்கிறது.
#வயிற்றுபிரச்சனை
குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறைக்க உதவுகிறது. இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண் மற்றும் வயிறு வீக்கம் குறைக்க உதவுகிறது.
மேலும் சில பயன்கள்,
அரிப்பு, கொதிப்பு, கொப்புளங்கள், சுருக்கங்கள், முகப்பரு மற்றும் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
இது உங்களுக்கு வயதான தோற்றம் வராமல் செய்கிறது.
இது குறைவான அல்லது பலவீனமான விந்தணுக்கள் உள்ள ஆண்களில் விந்து குறைபாடுகளை சரிசெய்கிறது.
இது சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கத்தை குறைக்கிறது. வெளியே செல்லும் முன் 2 தேக்கரண்டி குல்கந்து சாப்பிடுங்கள்.
இது பெண்களின் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை குறைக்கிறது.
No comments:
Post a Comment