எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 70,000 ஆசிரியர்களின் நிலை என்ன?

Wednesday, February 5, 2020




கடந்த 2013 - ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நிய மன ஆணை வழங்கப்படா தவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என கடந்த ஆண்டு ஜனவரி 28 - ம் தேதி அமைச்சர் செங் கோட்டையன் அறிவிப்பு மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் அறிவித்தார் . ஆனால் எதிர்பார்த்து காத்திருந்து ஓராண்டு முடிந்து போன நிலையில் அமைச்சரின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாகி போனது .

 2013 - ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 70 ஆயிரம் பேர் அரசின் பணி நியமன ஆணையை எதிர்பார்த்து 7 ஆண்டுகளாக காத்துக்கி டக்கிறார்கள் . இந்த நிலையில் தற் போது மீண்டும் 2020 ஜூலையில் ஆசிரியர் தகு தித்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்து அட்டவணை வெளியிட்டுள்ளது . அப்போது ஏற்கனவே தேர்ச்சி பெற்ற 70 ஆயிரம் பேரின் கதி என்னவாகும் ? என தெரியவில்லை. எனவே அமைச்சர் அறிவித்தபடி 2013 - ல் ( டி .இ .டி ) டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசி ரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிய மன ஆணையை வழங்க வேண்டும் அது வரை தற் போது அறிவித்த ( டி . இ . டி . ) டெட் தேர்வைரத்து செய்ய வேண்டும் என தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலப் பொதுச்செயலா ளர் ஜான்மோசஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

2 comments

  1. ஆசிரியர் தகுதி தேர்வு என்பது போட்டி தேர்வு அல்ல. தகுதி தேர்வு மட்டுமே.... அப்படி இருக்கையில் தேர்ச்சி பெறுபவர் அனைவருக்கும் எப்படி வேலை கொடுக்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. வேலை கொடுக்க முடியாதவர்கள் ஏன் மறுபடியும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்

      Delete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One