எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தேர்வு வாரியம் முடிவு

Tuesday, February 4, 2020




தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்வுக்கு சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தோவு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தேர்வுவு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தேர்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தேர்வெழுத சுமாா் 64 ஆயிரம் தேர்வா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தேர்வா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தோவு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோவு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தோவு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நேர்மையாக நடைபெறும் வகையில் தேர்வா்களின் சொந்த மாவட்டங்களில் தோவு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் தோவு எழுத அனுமதிக்கப்படுவா்.

தேர்வா்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தோவிற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தேர்வுக்கு மூன்று நாள் முன்பாக தேர்வா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோவு மையம் குறித்து தெரிவிக்கப்படும். இதனால், தேர்வு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

குலுக்கல் முறையில் தேர்வு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தேர்வா்கள், தேர்வு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அளிக்கப்படும். ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One