திருக்குறள்
அதிகாரம்:கல்வி
திருக்குறள்:399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம்:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
பழமொழி
Better do a thing than wish it to be done .
தன் செயலை தானே செய்தால் அழகு .
இரண்டொழுக்க பண்புகள்
1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.
2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.
பொன்மொழி
உண்மையைப் பேசி நேர்மையாக நடந்தால் யாருக்கும் தலைவணங்கி வாழத் தேவையில்லை.
பொது அறிவு
1.விமானத்தில் உள்ள கருப்புப்பெட்டியின் நிறம் என்ன?
ஆரஞ்சு.
2.தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் (அரசு பேருந்து) யார்?
திருமதி. வசந்தகுமாரி
English words & meanings
Knight - a soldier of a high level who fought on a horse in the Middle Ages. குதிரை மேல் ஏறி போர் புரிந்து வீர சாகசங்கள் நடத்தியவர்.
Night - the end of the day and sunlight and becomes dark. இரவு
ஆரோக்ய வாழ்வு
சீதாப்பழத்தில் வளமையான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளன .இவை இரண்டுமே உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
Some important abbreviations for students
HSPA - High Speed Packet Access
GPRS - General Packet Radio Service
நீதிக்கதை
கழுதையின் தன்னம்பிக்கை
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?
இன்றைய செய்திகள்
07.03.20
◆சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலி மாசு அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் உடல், மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
◆எதிரி நாடுகளின் ஆளில்லா உளவுவிமானங்களை திசை திருப்பி, நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நவீன குட்டி விமானத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
◆கரோனா வைரஸ் இந்தியாவில் 31 பேருக்கு உறுதி; விமான நிலையங்களில் கடும் சோதனை: மத்திய அரசு தகவல்.
◆கரோனா வைரஸ்; உலகம் முழுவதும் 290 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி பாதிப்பு: யுனெஸ்கோ தகவல்.
◆ஃபிடே மகளிா் கிராண்ட்ப்ரீ செஸ் போட்டியில் உலக சாம்பியன் ஜு வென்ஜுனை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா் இந்திய நட்சத்திர வீராங்கனை டி.ஹரிகா.
◆டேவிஸ் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக வலுவான குரோஷிய அணியுடன் இந்திய அணி மோதும் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
Today's Headlines
🌸 In Chennai there is more sound pollution recorded than the alloted limit. This may lead to the danger of physical and psychological damage.
🌸Madras IIT researchers have developed a modern tiny aircraft that will take control of the spy aircrafts of enemy countries.
🌸 In India 31 people affected with Corona virus is confirmed. Heavy checkup at airports are being carried out information from central government .
🌸Corona virus : It's impact is on more than 290 million students worldwide. Information by UNESCO .
🌸World champion Zhu Wenjun was defeated by the Indian star player T. Hariha inFede Women's Grand Prix Chess competition. It arose a shock wave.
🌸The Indian team clashes with the Crotioya team as part of the Davis Cup begins on Friday.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment