எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

8 ஆம் வகுப்பு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Thursday, March 5, 2020




தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு - "தனித்தேர்வு" என்பது "பொதுத்தேர்வு" என தவறுதலாக சுற்றறிக்கையில் பதிவாகியுள்ளது - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம்


அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி, மார்ச் 3ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்க இருப்பதாகவும், அதற்கு தேர்வு மையங்களின் பட்டியலை தயார் செய்யும்படியும் ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்களை நியமனம் செய்து அந்த பட்டியலை மார்ச் 13க்குள் சென்னைக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார். இந்த குளறுபடி குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு முகநூலில் பதிவிட்டிருந்தார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

_இந்நிலையில் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூலில் கூறியது,_

முகநூலில் “எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு” அறிவிப்பு குறித்து நான் பதிவிட்டிருந்தத்தகவலை அடுத்து, சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு,  எட்டாம் வகுப்பு “தனித்தேர்வு” என்பது சுற்றறிக்கையில் தவறுதலாக “பொதுத்தேர்வு” எனக் குறிப்பிடப்பட்டு விட்டதாகவும், அதுவே குழப்பத்திற்குக் காரணம் எனவும், தவறு சரிசெய்யப்பட்டு நாளை (05/03/20) புதிய சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்ததுடன், ஏற்கனவே அறிவித்தபடி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மாற்றம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே._



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One