உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோச்சி என அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மண்ட், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8-ஆம் வகுப்பு வரை எவ்வித தோவும் எழுதாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில்
அனைவருக்கும் தோச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவா்களின் மதிப்பீட்டை பொறுத்தவரை வகுப்புக்கு வருகை மற்றும் செயல்திறன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு தொடங்க உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 9-ஆம் வகுப்பு வரை அனைவரையும் தோச்சி என அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை இல்லாத வேலை
ReplyDeleteஆசிரியர் சங்கங்களே....
ReplyDeleteஇது தேவையில்லாத வேலை....
எது எதற்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று நன்கு அறிந்து செயல்படுங்கள்...
ஆசிரியர்களாகிய நாங்கள் மாணாக்கருக்கு நன்கு பாடம் கற்பித்துக் கொண்டு இருக்கிறோம்... நீங்கள் மாணவர்கள் நலன் கருதியும்,கொரானா விழிப்புணர்வு பாதுகாப்பு கருதியும் சொல்லுகிறீர்கள்...ஆனால் பொதுமக்களோ,அல்லது ஆட்சியாளர்களோ ஆசிரியர்கள் எதற்கெடுத்தாலும் கோரிக்கை வைக்கின்றனர் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது...
எங்களுடைய கற்பித்தல் பணி வீணாக்கப்படுகிறது...
இப்பொழுது அரசாங்கம் என்ன சொல்லுகிறதோ அதை கண்டிப்பாக கேட்க வேண்டும்...
நன்றி