ஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தேர்வு அறையில் இதை தெளியுங்க..!! கொரோனோவால் தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளித்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எளிதில் தொற்றும் கொரோனா வைரஸ்
சீனாவில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட. நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது , இந்தியாவையும் இது விட்டுவைக்க வில்லை. கர்நாடகா,டெல்லியில் தலா ஒருவர் வீதம் இரண்டுபேரை பலிவாங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட. பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. மேலும் 10,11,12, ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடக்கின்ற தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின் நலன்கருதி தினந்தோறும் கிருமிநாசினி தெளித்திட வேண்டுகின்றோம். மேலும் மாணவர்களுக்கு விடுமுறையளித்துவிட்டு ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பது பல்வேறு சிரமங்கள் உள்ளது. மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் கொடுமையிலிருந்து தற்காப்பு நடவடிக்கையாக ஆசிரியர்களையும் விடுவிக்க வேண்டுகிறோம்.
தமிழ்நாட்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ஈராசிரியர் பள்ளிகள் 1000க்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட 35 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கிவருகிறது. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 96 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
மேலும் "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்" ஆசிரியர்களுக்கும் தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். அதேநேரத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுவருகிறோம். மாணவர்களுக்கு விடுமுறை விடும்போது ஆசிரியர்களுக்கும் விடுமுறை வழங்குவதற்கு ஆவனச் செய்தும் தேர்வு நடைபெறும் அனைத்துப்பள்ளிகளுக்கும் கிருமிநாசினி தெளித்திட வேண்டியும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment