வெற்றியாளர்களின் சாதனைகளில் கேட்டுப் பழகிய இந்த சமூகத்தில் தோற்றவர்களின் கதைகளுக்கு இடமில்லை.
ரத்தம் சொட்ட சொட்ட கட்டைவிரல் வெட்டப்பட்ட ஏகலைவர்கள் வரலாறு வழிநெடுகிலும் எத்தனை எத்தனையோ.
இந்த நூல் தோற்றவர்களின் சரிதைகள் பேசுகிறது.
இத்தாலி நாட்டு பள்ளிக்கூடங்களில் பெயிலாக்கப்பட்டு வீதிக்கு துரத்தப்பட்ட மாணவர்கள் தாங்கள் பெயிலாக்கக்கப்பட்டது ஏன் என்று அரசமைப்பை நோக்கி கேள்வி கேட்கிறார்கள்.
இந்த கேள்விகளில் சீற்றத்தில் நெருப்பு பிறக்கிறது.
நமது நாட்டிலும் பெயில் ஆக்கப்பட்டு எங்கெங்கோ விளிம்புகளுக்கு வீசப்பட்ட மாணவ மாணவியரை இந்த கணத்தில் நினைத்துக் கொள்வோம்.
35 மார்க் எடுத்து பாஸ் 34 மார்க் எடுத்தவர்கள் பெயில். இது எப்படி? 34க்கும் 35 க்கும் இடையில் இவர்கள் வாழ்வு தொலைந்தது.
இவர்கள் ஒவ்வொருவரும் பேச வேண்டும். சொல்வதற்கு நூறு கதைகளும் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகளும் இருக்கின்றன இவர்கள் ஒவ்வொருவரிடமும்.
இப்புத்தகமெங்கும் நாங்கள் என்ற சொல் பெயிலான எட்டு மாணவர்களை குறிப்பது போலவே நீங்கள் என்ற ஒவ்வொரு சொல்லும் பள்ளி பாடத்திட்டத்தினால் எந்திரம் ஆகிப்போன ஒவ்வொரு ஆசிரியரையும், கல்வி அமைப்பையும் குறிக்கிறது.
துவக்கப்பள்ளியில் அரசு இரண்டாந்தர கல்வியையே வழங்கியது.
ஒரே அறையில் 1 முதல் 5 வகுப்புகள்.
கருப்பினத்தவர்களையும் வெள்ளையர்களையும் பிரிக்க அமெரிக்காவின் கையாளப்பட்ட அதே அமைப்பு.
ஏழைகளுக்கான ஏழ்மையான பள்ளி .
படிக்காதவன், படிக்க லாயக்கற்றவர், என்று ஒருவரும் இல்லை.
கூட்டாக கற்பது சிறந்த அரசியல் தனியாக கற்பது சுயநலம் .
உங்கள் மாணவர்களின் இலக்கு என்பது பெரும் துயரமானதுதான்.
பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்களுக்காக, தேர்ச்சி அறிக்கைக்காக, சான்றிதழுக்காக, மட்டும்தான் வேகவேகமாக படிக்கிறார்கள்.
அந்த வேகத்தில் சிறந்த நுட்பமான விஷயங்களை தவறவிட்டு விடுகிறார்கள்.
விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் காலத்திற்கேற்ப மாற்றம் பெறுவதில்லை.
மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது.
நாம் கேட்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் நம் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அதை ஆமோதிக்கும் அதேநேரம் ஆதர்ச பள்ளிகளை உருவாக்கவும் எல்லா பள்ளிகளையும் ஆதர்ச பள்ளியாக மாற்றவும் உறுதி பூண வேண்டும் .
கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதி இல்லை, என்ற நிலை கொணர்வது பெரும் புரட்சிதான்.
பாடங்களின் சுமையாலும், ஆசிரியர்களின் கடுமையாலும், பள்ளியை விட்டு வெளியேறிய ஏழை கிராம குழந்தைகளின் பாதங்களில் இந்நூல் காணிக்கையாகட்டும்.
மொத்தத்தில் இந்நூல் ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோபமான விமர்சனம்.
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
இப்புத்தக வெளியீட்டாளரின் முகவரி தெரிந்தால் இதனை வாகுவதற்கு உதவியாக் இருக்கும்
ReplyDeletehttps://kaninikkalvi.blogspot.com/2020/03/hs.html
Delete