எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து - ஆட்சியர் எச்சரிக்கை!

Saturday, March 28, 2020




வேலூரில் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து - ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால் சிலர் இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.

144 தடை உத்தரவு மீறியதாக 4,100 பேர் மீதி தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பைக்கில் 2 பேர் சென்றாலும் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என் அவர் கூறியுள்ளார். மேலும் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்கள் தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும் என ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One