கொரோனா வைரஸ் தடுக்க, தவிர்க்க, தப்பிக்க
தனி மனித சுகாதரத்திற்கான அழைப்பிதழ்
வழங்கி திருச்சி அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் அழைப்பிதழில்
அன்புடையீர்,
வணக்கம்.
கோவிட்19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது.
ஊஹான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே,
கொரொனா வைரஸ் விழிப்புணர்வு செய்வோர் என்கிற வரனும்
கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரெனோ வைரஸ் தடுப்போர் என்கிற வரனும்
இணைந்து மக்களை காப்பாற்ற இருக்கின்றனர்.
வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுப்பதே தற்போது முதன்மை நோக்கமாக இருக்கிறது.
வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகியவை தொடர்பான செய்திகளை அரசு ஊடகம் மற்றும் பிற செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொள்ளுங்கள். வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் உறுதிபடுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம், பிறருக்கும் பகிர வேண்டாம்.
இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அனுகவும்.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மூக்கு - வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது.
சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
எப்போதும் கை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இருமல், தும்மலின் போது மூக்கு, வாயை துணியால் மூடிக்கொள்வதும் அவசியம் ஆகும்.
கொரோனா விழிப்புணர்வை நாட்டின் நலன் காக்கும் நல்லவர்களும், அறிஞர்களும், பொதுமக்களும், மகளிர் இளைஞர்களும், திருநங்கைகளும், கல்லூரி தோழர்களும், தோழியர்களும் மற்றும் சுற்றமும் நட்பும் சூழ கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, தவிர்க்க தனி மனித சுகாதாரத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
தங்களன்புள்ள திருமதி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் திருச்சிராப்பள்ளி அவ்வண்ணமே கோரும் யோகா ஆசிரியர் விஜயகுமார்
அமிர்த யோகம் மந்திரம் திருச்சி என அச்சிட்டு வழங்கி தனிமனித சுகாதாரத்திற்காக கை கழுவுதலை வலியுறுத்தியும், நண்பர்களிடையே கைக் கூப்பி வணக்கம் சொல்லுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment