மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்வதேச பெண்கள் தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஒரு வார காலத்துக்கு சிறந்த சில பள்ளி மாணவிகளுக்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மாணவி ஒருவர் ஒரு நாள் கலெக்டராக செயல்பட்டு அசத்தி உள்ளார். அந்த மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்.
இது தொடர்பாக புல்தானா மாவட்ட ஆட்சியர் சுமன் ரவாத் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச பெண்கள் தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஒரு வார காலத்துக்கு சிறந்த சில பள்ளி மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இன்றைய மாவட்ட ஆட்சியராக ஜில்லா பரிஷத் பள்ளியின் சிறந்த மாணவி பூனம் தேஷ்முக். பூனம் தேஷ்முக் இன்று திங்கட்கிழமை கலெக்டராக தனது பணியை நடத்துகிறார். அவர் ஒருநாள் வெற்றி பெற நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும இருக்கிறார்.
கடினமாக உழைப்பதாகவும், மற்ற பெண்களை ஊக்குவிப்பதாகவும் அந்த மாணவி உறுதிமொழி எடுத்துள்ளார். மேலும் மாணவி பூனம் படத்தையும் மாவட்ட ஆட்சியர் பகிர்ந்திருந்தார்.
No comments:
Post a Comment