திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஆளுமைகள் குறித்த புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகர் தேவகி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,
சர்வதேச மகளிர் தினத்தினை
1975-ம் ஆண்டு
ஐ.நா. அங்கீகரித்தது.
வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது என்றார். தொடர்ந்து
மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் போற்றும் பெண்மணிகள் தலைப்பில் பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
உலகளவில் பல நாட்டு பெண் ஆளுமைகள் குறித்த நூல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நூலக வாசகர்கள் ஆர்வமாக நூல்களை வாசித்தனர்.
No comments:
Post a Comment