நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், நீச்சல் குளம், மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், நீச்சல் குளங்கள், தனியார் பொழுது போக்கு பூங்காக்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரையும் மூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment