எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
* அரசு, ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.
* ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?
ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
கரூர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
������ *அரசு பணத்தை விரயம் செய்யும் கல்வி அதிகாரிகள்*
ReplyDelete*கல்வி அதிகாரிகளின் அலட்சியத்தால் அலைக்கழிக்கப்படும் (அவதியுறும்) ஆசிரியர்கள்*
������������
*2019-2020 ஆம் கல்வியாண்டில் 21.11.2019 அன்று நடைபெற்ற மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் பணிவிடுவிப்பு பெற்று 25.11.2019 அன்று பணிமாறுதல் பெற்ற பள்ளியில் பணியில் சேர்ந்து விட்டனர்.ஆனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் 3 மாதங்கள் ஆகியும் பணிவிடுவிப்பு செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் பணிவிடுவிப்பு செய்ய தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளிகளிலும் மூன்றிற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் அவர்கள் பணியிடத்தைக் காலிப்பணியிடமாக கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தற்காலிக ஆசிரியர்களும் 04.02.2020 முதல் பணியாற்றி வருகின்றனர்.ஒரே பணியிடத்தில் இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதுடன் இருவருக்கும் அரசு சம்பளம் வழங்குகிறது. இதனால் அரசு பணம் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணடிக்கப்படுகிறது. பணிமாறுதல் பெற்றும் பணிவிடுவிப்பு செய்ய உரிய தகுதிகள் இருந்தும் கடந்த 3 மாதங்களாக பணிவிடுவிப்பு செய்யப்படாமல் எவ்வித காரணங்களும் எவ்வித ஆணையும் அளிக்கப்படாமல் ஆசிரியர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டு அதீத மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.*
*இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கின்றனர்.*