குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் - 2009கீழ் நியமன தகுதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) தேர்ச்சி பெறவேண்டும் என மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது .
தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி பள்ளி நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டவர்களால் நியமனம் ஒப்புதல் கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு மற்றும் இதர பணப்பலன்கள் அனுமதிக்க கோரியும் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்து அதில் தீர்ப்பாணைகளும் பெற்றுவுள்ளனர் .
மேலும் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பாணையின் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஊதியம் மட்டுமே பெற்று வரும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுகள் மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் கோரி வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பாணைகளும் பெறப்பட்டு வருகின்றன .
இது குறித்த அறிக்கையினை அரசுக்கு சமர்பிக்க வேண்டியுள்ளதால் தற்போது இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை 19.03.2020க்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இதில் எவரது பெயரும் விடுபடாமலும் எவ்வித காலதாமத இன்றி உடன் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
Click Here - TET Case Pending Circualr - Pdf
No comments:
Post a Comment