எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எங்கள் நிலத்தில் அடக்கம் செய்யலாம் : மதுரை மாணவியின் மனிதாபிமானம்

Saturday, April 25, 2020




கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இறந்தால், அவர்களின் உடலை, தங்கள் நிலத்தில் அடக்கம் செய்யலாம் என, பிரதமர் மோடிக்கு மதுரை மாணவி கடிதம் எழுதியுள்ளார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியைச் சேர்ந்த, பாரதிதாசன் மகள் தென்னரசி. தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.இவர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'என் தந்தை விவசாயி. எங்களுக்கு, 3 ஏக்கர் நிலம் உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ள டாக்டர், நர்ஸ், போலீசார், நாளிதழ் மற்றும் துாய்மை பணியாளர்கள் வைரஸ் பாதிப்பால் இறந்தால், உடலை அடக்கம் செய்ய, எங்கள் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.தென்னரசி கூறியதாவது: கொரோனா பாதிப்பால் இறந்த, சென்னை டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அறிந்து, வேதனை  அடைந்தேன்.

நம் பாதுகாப்பிற்காக பணியாற்றுபவர்களுக்கு நாம் தான் உதவ வேண்டும்.வைரஸ் பாதித்து, சம்பந்தப்பட்ட துறையினர் இறந்தால், அவர்களை அடக்கம் செய்ய நம் இடத்தை தரலாமே என தந்தையிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார்.இதைத் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஏற்கனவே, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'தினமலர்' அலுவலகம் மூலமாக, 25 கிலோ அரிசி வழங்கியுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One