கொட்டாவி விடுவதை பார்த்தாலே மற்றொருவருக்கு கொட்டாவி வரும் என்பது பொதுவாக நிலவும் ஒரு கருத்து ஆகும். கொட்டாவி என்பது உடலியலில் நடைபெறும் ஒரு அனிச்சைச் செயலாகும். மூளைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறையும் போது மூளைச் செல்கள் களைப்படையும் போது நுரையீரல் செயலியலைத் துரிதப்படுத்தவும் கொட்டாவி என்ற நிகழ்வு ஏற்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பணியில், வேலையில் ஒரு குழு ஈடுபட்டு இருந்தால் அதில் உள்ள நபர்கள் அனைவருக்கும் புறச்சூழல் மற்றும் பணி தன்மையும் ஒரே மாதிரி அமையும். ஆதலால் களைப்பும் சோர்வும் ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்த சூழலில் கொட்டாவி வர வாய்ப்பு உண்டு. ஒருவரைப் பார்த்து தான் மற்றொருவருக்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, அவசியமோ இல்லை.
No comments:
Post a Comment