சிலந்திப் பூச்சியின் பின்புறம், மெல்லிழைகளை உருவாக்கும் மூன்று உறுப்புகளைக் கொண்ட தொகுதி ஒன்று உள்ளது; இதன் மூலம் இழைகளை உற்பத்தி செய்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்கும் வலையை சிலந்தி உருவாக்குகிறது.
பூச்சிகள் பறக்கும்போது இவ்வலையில் தட்டுப்பட்டால், அவற்றின் பறக்கும் செயல் தடைபடுகிறது; அவ்வாறு தடைபட்டவுடனே வலையில் இருக்கும் சிலந்தி முட்டிமோதி தன் நச்சுக் கொடுக்குகளைப் பயன்படுத்தி அப்பூச்சிகளைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளுகிறது. பூச்சிகளுக்கோ, வலையில் மோதி தமது பறக்கும் செயல் தடைபட்டவுடனே, ஏதும் தோன்றாமல் திகைப்படைந்து, சிலந்தி விரித்த வலையில் எளிதாகச் சிக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் சிலந்தி தான் பின்னிய வலையின் பரப்பு முழுவதையும் நன்கு அறிந்திருப்பதால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுகிறது. சில சிலந்திகள் கோந்து போன்ற திரவத்தை வெளியிடுவதால், பறக்கும் பூச்சிகள் அதில் எளிதாக ஒட்டிக் கொள்ளுகின்றன.
No comments:
Post a Comment