எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பொது ஊரடங்கு தொடர்பான சட்ட விழிப்புணர்வு!

Sunday, April 5, 2020




மத்திய மற்றும் மாநில அரசாங்கம் கொரோனா என்ற ஆட்கொல்லி வைரசை சமூக தொற்றாக ( கொள்ளை நோய் ) ஆகாமல் தடுப்பதற்காக வேண்டி ஊரடங்கு உத்தரவை 14.04.2020 ( செவ்வாய் கிழமை ) வரை பிறப்பித்துள்ளது. மேலும் சுகாதார துறை , வருவாய் துறை மற்றம் காவல் துறையினரின் மூலமாக தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது. எனவே , நம்முடைய நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஒத்துழைப்ப கொடுப்பது நம் ஒவ்வொருவருடைய சட்டப்படியான கடமையாகும். சுகாதார துறை , வருவாய் துறை மற்றம் காவல் துறை அதிகாரிகளுக்கு விசாரணையின் போது மனமுவந்து தன்னிச்சையாக உண்மையான விவரங்களை அளிப்பதும் நம்முடைய சட்டப்படியான கடமையாகும்.

ஆவ்வாறு அரச துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்ப கொடுக்க மறுப்பது மற்றம் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தகுந்த காரணமில்லாமல் வெளியில் நடமாடுவது , கூட்டம் கூடுவது வாகனங்களில் பயணம் செய்வது கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்க பரவ வழிவகுப்பதுடன் சமூக தொற்று ( கொள்ளை நோய் ) நிலைக்கு வழிவகுத்துவிடும் எனபதால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம். 1939 , கொள்ளை நோய் தடுப்பு சட்டம். 1897 மற்றம் இந்திய தண்டனைச் சட்டம் , 1860 ஆகியவற்றின் கீழ் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடிய குற்றங்களாகும்.



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One