தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் சமத்துவபுரம் ஊ.ஒ. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக திருமதி த உமாலட்சுமி மற்றும் இடைநிலை ஆசிரியராக திருமதி செல்வி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 22 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவர்களின் பெற்றோர்களில் ஒரு சிலர் கணவனை இழந்தவர்கள். ஒரு சிலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். மற்றவர்களும் தினமும் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அரசுப் பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட CEO திரு குணசேகரன், திருப்பத்தூர் DEO திருமதி மணிமேகலை கந்திலி BEO திரு வெங்கடாசலம் மற்றும் திருமதி சித்ரா ஆகியோர் அறிவுரைகளின்படி இன்று 22-04-2020 புதன்கிழமை முற்பகல் 8மணிக்கு வெங்களாபுரம் சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சுமார் 12000ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை தலைமை ஆசிரியர் த.உமாலட்சுமி அவர்கள் வழங்கினார். மேலும் அனைத்து பெற்றோர்களுக்கும் கோரோனா வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது.
வறுமையால் வாடும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆசிரியர்கள்!
பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் இணைந்து, உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், நெய்காரம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் மாணவர்களை தொடர்பு கொண்டு, குடும்ப சூழலை கேட்டறிந்து, தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.அப்பள்ளிதலைமையாசிரியர், மணிசெல்வன் கூறியதாவது:இப்பகுதியில் தேங்காய் தொட்டி தொழிற்சாலையை நம்பிய குடும்பங்கள் தான் அதிகம். அனைத்தும் முடங்கியதால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சிலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.இவர்களின் குழந்தைகள், அதிகளவில், எங்கள் பள்ளியில் படிக்கின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, மாணவர்களை தினமும் தொடர்பு கொண்டு, தேவைகளை கேட்டு வருகிறோம். நேரில் உதவ முடியாத பட்சத்தில், அவர்களின் வங்கி கணக்குகளுக்கு, 200, 500, 1,000 ரூபாய் என, முடிந்த தொகையை அனுப்பி வருகிறோம். இதனால், 400க்கும் மேற்பட்டமாணவர்களின் குடும்பங்கள், தங்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment