இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 3 தேதி வரை நீட்டிப்பு : பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
*(முழு விவரம்)*
*♦♦மேலும் 19 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு*
*♦♦நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு*
*♦♦அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காக ஏப்.20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும்.*
*- பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!*
*♦♦கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது*
*♦♦ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்*
*- பிரதமர் மோடி*
*♦♦கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்*
*♦♦நாட்டுமக்கள் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது*
*♦♦ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது*
*♦♦"கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடி வருகிறது; ஊரடங்கு உத்தரவால் மக்கள் சந்திக்கும் சிரமங்களை புரிந்து கொள்ள முடிகிறது!"*
*♦♦கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வலிமையாக நடைபெறுகிறது.*
*♦♦கொரோனாவை தடுப்பதற்காக நாட்டு மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்*
*♦♦கொரோனாவை தடுப்பதற்காக மக்கள் செய்து வரும் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன்*
*♦♦கொரோனாவை தடுப்பதற்காக நாட்டு மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்*
*♦♦கொரோனாவை தடுப்பதற்காக மக்கள் செய்து வரும் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன்*
*♦♦உலகின் பல நாடுகளைவிட இந்தியா முன்னோடியாக கொரோனா தடுப்பில் உள்ளது.*
*♦♦பண்டிகை காலத்திலும், மக்கள் வீடுகளிலேயே இருப்பது பாராட்டுக்குரியது; நமது ஒற்றுமையின் வலிமையை பிரதிபலித்துக்கொண்டு வருகிறோம்*
*♦♦ஊரடங்கால் சிலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது*
*♦♦பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நாட்டை மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்*
*♦♦கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் படை வீரர்கள் போல் செயல்படுகின்றனர்*
*♦♦கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.*
*♦♦கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு உரையாற்றினார்.*
*⭕⭕அப்போது அவர் தெரிவித்ததாவது:*
*♦♦"கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும்.*
*♦♦இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும்".*
*♦♦ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.*
*♦♦அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காக ஏப்.20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும்.*
*♦♦ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.*
*♦♦➤ தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மே 3 வரை மக்கள் கடைபிடிக்க வேண்டும்*
*♦♦ஏழைகளுக்கு பொதுமக்கள் உணவளிக்க வேண்டும்*
*பிரதமர் வேண்டுகோள்*
*♦♦ஊரடங்கு லட்சுமண ரேகை போன்றது: மோடி*
*♦♦நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும்.*
*பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே பேச்சு*
*♦♦உலக நாடுகளை ஒப்பிடும்போது கொரோனாவை இந்தியா சிறப்பாக கட்டுப்படுத்துகிறது - மோடி*
*♦♦வயதில் மூத்தவர்களை அதிக கவனத்துடன் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்*
*♦♦ஹாட்ஸ்பாட் இல்லாத இடங்களில் ஏப்ரல் 20-ந் தேதிக்கு பின்னர் லாக்டவுனில் தளர்வுகள் அமல்படுத்தப்படும்*
*♦♦ஏப்ரல் 20 வரை ஊரடங்கு கட்டுப்பாடு மிக கடுமையாக பின்பற்றப்படும்; - பிரதமர் மோடி*
*♦♦ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.*
*♦♦நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை பிற நாடுகள் பாராட்டி வருகின்றன என்றார். கொரோனா பரவலை தடுக்க தனி மனித இடைவெளி முக்கிய பங்கு வகிக்கிறது என்ற அவர், பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது எனத் தெரிவித்தார்.*
*♦♦நாம் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சரியானது எனவும் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.*
*♦♦ஏப்ரல் 20-க்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும்*
*♦♦யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம்.. விரிவான வழிகாட்டுதல் நாளை வெளியீடு*
*♦♦ஏப்ரல் 20 முதல் விலக்கு அளிக்கப்படும் பணிகள் குறித்து நாளை அறிவிக்கை வெளியிடப்படும்*
*♦♦ஏப்ரல் 20முதல் ஊரடங்கின் நிலை படிப்படியாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் மோடி*
*♦♦மே மாதம் 3ம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.*
*♦♦நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.*
*♦♦அவர் பேசுகையில், ``கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில் முதல் நபர் கொரோனாவில் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே, அதனால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களை விமான நிலையங்களில் சோதனை செய்யத் தொடங்கிவிட்டோம்.*
*♦♦நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 550 என்று இருந்தநிலையிலேயே ஊரடங்கு உத்தரவை 21 நாள்கள் அமல்படுத்துவது என்று முடிவெடுத்தோம். பிரச்னை பெரிதாகும் வரையில் நாம் காத்திருக்கவில்லை. அதேநேரம், பிரச்னை தெரிந்ததும் உடனடியாக அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்தோம்.*
*♦♦வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான அறிவிப்பு நாளை வெளியாகும்’’ என்றார்.*
No comments:
Post a Comment