'எல்.ஐ.சி., சந்தா செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும்' என, எல்.ஐ.சி., நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், எல்.ஐ.சி., சந்தா செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சந்தா செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான சந்தாசெலுத்த வழங்கப்பட்ட அவகாசம், மார்ச்., 22ல் முடிந்தது.இதற்கான அவகாசமும், ஏப்., 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.மேலும், ஆன்லைனில் பதிவு செய்யாமல், அடிப்படை தகவல்கள் வாயிலாக, தங்கள் சந்தாவை பாலிசிதாரர்கள் செலுத்தலாம்.
மேலும், LIC pay என்ற, மொபைல் ஆப் வாயிலாகவும், நேரடியாக சந்தாவை செலுத்த முடியும். இதுதவிர, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் வங்கி போன்றவை வாயிலாகவும், சேவை கட்டணமின்றி செலுத்தலாம்.கொரோனா வைரஸ் நோயால் இறப்பு ஏற்பட்டால், இதர காரணங்களால் இறந்தவர் என்ற அடிப்படையில், இறப்பு பலன்களை உடனடியாக பெற முடியும். இதேபோல, கொரோனா வைரசால் இறந்த, 16 பாலிசிதாரர்களின் குடும்பங்களுக்கு, இறப்பு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment