எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஊரடங்கிற்கு பிந்தைய செயல்திட்டங்கள் குறித்து 15ந் தேதிக்குள் மாநில முதலமைச்சர்கள் தெரிவிக்க வேண்டும் - பிரதமர் மோடி

Tuesday, May 12, 2020




கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கைத் தளர்த்துதல் குறித்த செயல்பாட்டு வழிமுறைகளை, வரும்15-ஆம் தேதிக்குள் தம்மிடம் பகிர்ந்துகொள்ளுமாறு மாநில முதலமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்

கொரோனா பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேற்று 6 மணி நேரம் கலந்துரையாடினார்

ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது

அப்போது பேசிய மோடி, நோய் பரவலைக் குறைப்பது மற்றும் சமூக பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரிப்பது ஆகியவற்றுடன் கிராமப்புறங்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

அந்தந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கைத் தளர்த்துதல் குறித்து செயல்பாட்டு வழிமுறைகளை மே 15-ஆம் தேதிக்குள் தம்மிடம் தெரிவிக்குமாறு முதலமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்

கொரோனா பரவலை தடுக்க வேண்டிய அதே நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய இரண்டு கட்ட சவால் நம் முன் உள்ளதாக மோடி தெரிவித்தார்.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவும் விதம் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஊரடங்கை படிப்படியாக திரும்பப் பெற்றாலும் தடுப்பூசி உள்ளிட்ட தீர்வுகள் எட்டப்படாத வரை சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

பருவமழை தொடங்கியவுடன், கொரோனா அல்லாத நோய்கள் அதிகரிக்கும் என்பதால் மருத்துவ மற்றும் சுகாதார முறைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One