சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துவருகிறார்.
அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த வங்கிக்கடன், முதலீட்டு வரம்பில் தளர்வுகள் உள்ளிட்ட 6 அருமையான சலுகைகளை அறிவித்தார்.
இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தார். வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடியை ஒதுக்கிய மத்திய நிதியமைச்சர், அதுகுறித்து பேசுகையில், இந்தியா மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது.
அதற்கு காரணம், மின்னுற்பத்தி நிறுவனங்கள் தான். எனவே அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவை மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்கியவர்களுக்கு கை கொடுக்கும் விதமாகவும், மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடியை ஒதுக்குவதாக தெரிவித்தார்.
*🔵⚪ #BREAKING :*
*20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்?*
*Big 6 plan for 'Aatmanirbhar Bharat'*
*Mega boost to MSMEs*
*EPF relief for aam aadmi*
*Push to rescue DISCOMs*
*Tax relief for non-salaried payments*
*Real estate sector get relief*
*Move to boost NBFCs & Micro finance*
🔵⚪ *நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைப்பு*
*இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்*
*2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு*
*வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிப்பு*
🔵⚪ *சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்னணு சந்தை இணைப்பு வழங்கப்படும்*
*தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்துவது அடுத்த 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது*
*சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம்*
*அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்*
*வாடிக்கையாளர்களுக்கு இதன் பயனை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும்*
🔵⚪ *ஏற்கனவே 3 மாத சலுகையை அரசு வழங்கியிருந்தது*
*இதன் மூலம் 72 லட்சம் தொழிலாளர்கள் மேலும் பயன்பெறுவார்கள்*
*வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி*
*இதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களில் முதலீட்டை பெறவும், எளிதாக கடன் பெறவும் முடியும்*
*இதன் மூலம் அரசுக்கு ரூ.2500 கோடி செலவு ஏற்படும்*
*மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்*
*தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்*
*சிறு குறு தொழில் உலக அளவிலான டெண்டர் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது*
4% வட்டியில் எல்லா வங்கிகளும் வழங்கிய விவசாயிகள் நகை கடன் நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்குங்கள்....
ReplyDeleteஇந்தியர்கள் அனைவரும் பயன்பெறுவர்....