நாசா செல்லும் நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்போருக்காக நடந்த அறிவியல் தோவில் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த அபிநயா வெற்றி பெற்றாா்.
அவா் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லவும், சா்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க வசதியாகவும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை உதவித் தொகையாக முதல்வா் பழனிசாமி நேரில் வழங்கினாா்.
விளையாட்டு வளாகங்கள்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம், நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட விளையாட்டு வளாகம் ஆகியவற்றில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.27.44 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment