எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வாட்ஸ்ஆப் அட்மின்களே உஷார்..! நீங்கள் கைதாகலாம்.!

Wednesday, May 13, 2020




வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம்.

 முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள்.

உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏன் இந்த தீடிர் அறிவிப்பு?

டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய சமீபத்திய வழக்கு தான் போலீஸ் எச்சரிக்கைக்கு காரணம் . பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற சர்சையான வாட்ஸ் ஆஃப் குரூப் குறித்து நீங்கள் செய்தித்தாள்களில் கூட படித்து இருப்பீர்கள். ஒரு குரூப்பில் 18 வயதுக்கும் குறைந்த மாணவர்களுக்கு இடையான கலந்துரையாடல் சர்ச்சையானது.

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய ஒருவர் மற்றொருவரை தூண்டுகிறார். இதன் அடிப்படையில் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்தார்கள். வாட்ஸ்ஆப் குரூப் அட்மினனை கைது செய்தார்கள். 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று, அவர்களோட செல்போனும் பறிமுதல்செய்யப்பட்டது.

டெல்லி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:

பள்ளிக்கூட மாணவர்கள் வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளார்கள். அந்த குரூப்ல தினமும் சாட் செய்கிறார்கள். அந்த குரூப்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளும்போது இரண்டு ஆண்களுக்கு இடையேயான உரையாடல். ஒரு ஆண் சம்பந்தப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்கிற கோணத்தில் பேசுகிறார். போலீஸ் உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அது இரண்டு ஆணுக்கும் இடையேயான உரையாடல் இல்லை, ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான உரையாடல்.

போலீஸ் அதிர்ச்சி:

சம்பந்தப்பட்ட பெண் என்ன சித்தார்த் என்ற பெயரில் ஒரு போலியான ஐடி தயார், சாட் பண்ணி இருக்காங்க. அடடா ஒரு பெண்னே சம்பந்தப்பட்ட இருக்காங்களே என்று போலிஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக போலீஸ் நடவடிக்கை:

இதை தொடர்ந்து தான் தமிழக போலீசு பல எச்சரிக்கையா விடுத்துள்ளனர். பெண்களின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சர்ட்டில் பகிர்ந்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஃபர்மேஷன் சட்டம் 2000, பிரிவு 67, 67-ஏ , 67-பி மற்றும் இந்திய தண்டனை சட்டம் ( ஐ.பி.சி)யின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். புகார் தருவர், பாதிக்கப்பட்டவர் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.

 போலீசுக்கு தகவல் சொல்ல உதவி எண் 112155260 (காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை) என்கின்ற எண்ணில் தகவல் சொல்லலாம்.அதே போல 112 என்ற போலீஸ் எண்ணுக்கும் தகவல் சொல்லலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One