எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி சமர்ப்பித்த பரிந்துரைகள் விவரம்

Friday, May 29, 2020




பள்ளிகள் திறப்பது குறித்த மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

 அதில், மண்டல வாரியாக பள்ளிகளை திறக்கலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

என்சிஇஆர்டியின் பரிந்துரைகள்:

முதற்கட்டமாக வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பள்ளிகளை திறக்கலாம்.

8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம்.

வகுப்பறையில் அதிகபட்சம் 15-20 மாணவர்களே இருக்க வேண்டும்.

 30% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்கள் அமர்வதில், 6 அடி தனிநபர் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

காலையில் பொது பிரார்த்தனை நடத்தக் கூடாது.

அனைத்து மாணவர்கள் மாஸ்க் அணிந்தே இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்கு வரக்கூடாது.

 இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே பள்ளிகள் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட், செப்டம்பரில் திறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One