எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினமும் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு முறைகள்

Monday, May 25, 2020





COVID-19
*பாரத சாரணர் - சாரணியர் இயக்கம் போளூர் கல்வி மாவட்டம்*

*தினமும் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு முறைகள்*

☮️
*குடிநீரை கொதிக்க வைத்த பிறகு குளிர்ந்தவுடன் வடிகட்டி குடிநீரை குடிப்பதே மிகவும் நல்லது*

☮️
*காய்கறிகளையும், பழங்களையும் நன்றாக தூய்மை செய்யாமல் எதனையும் பச்சையாகவும் பழமாகவும் உண்ணுதல் கூடாது*

☮️
*நாம் இருக்கும் அறை நல்ல காற்றோட்டம் இருக்குமாறு ஜன்னல்களை திறந்தநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்*

☮️
*வீட்டில் உள்ள மேசை, நாற்காலி, கட்டில், படுக்கைகள், தலையனைகள், ஆடைகள் முதலியவற்றை அடிக்கடி வெய்யிலில் போட்டு சுத்தப்படுத்த வேண்டும்*

☮️
*வீட்டில் கெட்டுப்போன பழங்கள், காய்கறிகள், கீரைகள், பழைய* *உணவுகள்,பதப்படுத்திய *உணவுப்பண்டங்கள்*
*உடனுக்குடன்* *அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பூமியில் புதைந்து விட வேண்டும்*

*தீங்கு விளையாதபடி தடுப்பதே இதன் நோக்கம்*

☮️
*ஈ,கொசுக்கள் உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல், ஈரப்பதமின்றி தூய்மையாக வைத்து பராமரித்தல் வேண்டும்*

☮️
*தன்னையும், தன்னோடு சார்ந்து இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் இல்லத்தை கிருமி நாசினி உபயோகப்படுத்தி தூய்மையாக வைத்திருப்பதை கடைபிடிக்க வேண்டும்*

☮️
*வெளியில் சென்று வந்த பிறகு குளிக்க வேண்டும், ஆடைகளையும் தூய்மை படுத்த வேண்டும் நுண்கிருமி தொற்றை தவிர்க்கவே இது*

☮️
*வெளிப்புற உணவு வகைகளை தவிர்ப்பது நலம்*,

*வீடானாலும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்*.

 *ஈ முதலியவற்றை நாட விடக் கூடாது*

☮️
*விஷ பூச்சிகள், ஈ, கொசுக்ககளால் தீங்கு ஏற்படாமலிருக்க வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு வலை தடுப்புகள் அமைத்தல் சிறந்தது*

☮️
*உணவு உண்ணும் முன்பு கை, கால்களை நன்றாக சோப்பு நீரால் சுத்தம் செய்தல் வேண்டும்*

☮️
*கை நகங்களை அடிக்கடி வெட்டி திருத்தம் செய்து கொள்வது அவசியமாகும்*

☮️
*அவ்வப்போது உடல் நல மருத்துவரை நோயாளிஅணுகி அவர் பரிந்துரை செய்யும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது மிக முக்கியமானதாகும்*

☮️
*நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெற்றோர்கள் கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு போடுவது அவசியமாகும் அதை அலட்சியபடுத்த வேண்டாம்*

☮️
*தொற்றுநோய் வைரஸ் பரவலை தடுக்க மத்திய ICMR, மாநில சுகாதார மையம் கூறும் நெறிமுறைகளை பின்பற்றி நடப்பது அவசியமாகும்*

☮️
*தொற்றுநோயாளி எத்தனை நாட்கள் தனியாக இருக்க வேண்டுமென மருத்துவர் கூறுகிறாரோ அத்தனை நாட்கள தனிமை படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்*

*அந்த சமயத்தில் யாரையும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது*

☮️
*மலம், சிறுநீர் மூலமாக வைரஸ்தொற்று பரவ வாய்புண்டு எனவே அவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்களை பயன்படுத்தக்கூடாது*

*கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திய பின் பயன்படுத்த வேண்டும்*

☮️
*ஒவ்வொருவரும் உடல் நலத்தை நன்றாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்*

☮️
*வைரஸ் பரவல் காற்றோடு கலந்து வரலாம்*

*உணவுப் பண்டங்களோடு வரலாம்*

*நாம் பயன்படுத்தும் ஆடைகள்,அணிகலன்கள், பாத்திரங்கள் தூய்மையற்றதாக இருந்தால் வரலாம்*

*நம் நகங்களில் ஒட்டியிருந்து அவற்றில் இருந்து நாம் உணவருந்தும் போது உணவோடு கலந்தும் உட்செல்லலாம்*

☮️
*இது போன்ற கொடிய நுண்கிருமிகளால் மிகுந்த ஆபத்து கூட ஏற்படலாம்*

☮️
*எனவே மருத்துவ தடுப்பு முறைகளை கையாள வேண்டும், பின்பற்ற வேண்டும்*

☮️
*நோயெதிர்ப்பு சக்தியை உடலில் மேம்படுத்த உதவும் நீர் ஆகாரங்கள், மஞ்சள் ,ஆரஞ்சு, சிவப்பு நிற வகை பழங்கள், மூலிகை குடிநீர்கள், எடுத்துக் கொள்ள வேண்டும்*

☮️
*தொற்றுநோய் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமல் தவிர்த்திருப்பது*

*நல்ல ஆரோக்கியமான உடலே இயற்கை தடுப்பாக உள்ளது - ஊட்டச்சத்துள்ள இயற்கை உணவு முறையை கடைபிடிப்போம்*

🔰☮️🔰⚜️🔰⚜️🔰☮️🔰

*கொரோனாவை ஒழிக்க*

🔰☮️🔰⚜️🔰⚜️🔰☮️🔰
⚜️
*எங்கும் தனித்திருப்போம்*
⚜️
*எதிலும் விலகியே இருப்போம்*

⚜️
*எப்போதும் விழிப்போடு இருப்போம்*

✳️⚜️
*அணிவீர் முகக்கவசம்*
*அதுவே-உன் உயிர்கவசம்*
*என்பதை உணர்வீர்*

🔰⚜️🔰⚜️🔰⚜️🔰⚜️🔰
*வெளியீடு*++++++++++++++++++
⚜️
*M. தட்சணாமூர்த்தி*
*M.A.,B.Lit.,B.Ed.,H.W.B.(S)*
*மாவட்ட செயலாளர்*
*பாரத சாரணர்-சாரணியர் இயக்கம்*போளூர்கல்வி மாவட்டம்*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One