எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

Saturday, May 9, 2020




எப்படியும் கொரோனாவோடு வாழ்வது என்று முடிவாகி விட்டது. பள்ளி, கல்லூரிகளில் social distancing கடைப்பிடிக்க ஏதுவாக shift system அல்லது alternative days வகுப்புகள் என்றெல்லாம் பலரும் எழுதவும், பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். பல முன்னேறிய நாடுகளைப்போல நம் நாட்டில் internet Education ஐ நடைமுறைப்படுத்த இயலாது. காரணம் நாம் digital divide ன் அடி மட்டத்தில் இருக்கிறோம். அதாவது, 8% இந்திய வீடுகளில்தான் இணைய இணைப்புக் கொண்ட கணினிகள் இருக்கின்றன. இத்தாலியில் குழந்தைகளுக்கு அரசு சென்ற மாதத்திலிருந்தே TAB களை வழங்கி, இணைய இணைப்பை இலவசமாக வழங்கி வருகிறது. கற்றல், கற்பித்தல் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம்.

பள்ளிகள் எப்போது திறந்தாலும் புத்தகங்கள் வழங்கப்படும்தானே... அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்றாற்போல கொரோனாவைப் பற்றி, social distancing, immune system, கை கழுவுதல், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம், ஆவி பிடித்தல் இப்படி உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டு ஒரு பக்கமோ, இரண்டு பக்கங்களோ தெளிவாகப் படங்களுடன் அச்சிட்டு அவற்றை பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்திற்கு முன் ஒட்டி விட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்து பேசிய பின்னரே, மாணவர்களின் ஐயங்களைக் களைந்த பின்னரே வகுப்புகளைத் தொடங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. சமூக விலகல் அல்லது தன்னொதுக்கல், பேருந்து வசதிகள்..இவை மட்டுமல்லாது... முதல் முறையாக உணவைப் பங்கிட்டுச் சாப்பிடாதே என்று மாணவர்களுக்குச் சொல்லப் போகிறோம். மாணவர்கள்தான் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One