இன்று முதல் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வங்கிகளில் பணமெடுக்க மக்கள் பெரும் அளவில் இனி கூடுவார்கள் என்பதால், அதனை முறைப்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் மே 4ம் தேதி தொடங்கி மே 11ம் தேதி வரை புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிகப்பட்டுள்ளது. இதன்படி மே 17 ம்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக இடைவெளி
தளர்வு அறிவிப்பு
எனினும் நாளை முதல் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிவப்பு மண்டலத்திலும் ஓரளவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல நிறுவனங்கள் இந்த வாரத்தில் சம்பளம் வழங்க உள்ளன.இதனால் வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் தற்போத சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
மே 4ல் யார் எடுக்கலாம்
புதிய விதிமுறை
இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவந்துள்ளன. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க்க உள்ளன. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மே 5ல் யார் எடுக்கலாம்
மே6ல் யார் எடுக்கலாம்
புதிய விதிமுறை இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவந்துள்ளன. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க்க உள்ளன. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மே 11 வரை அமல்
இந்திய வங்கிகள் சங்கம்
இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11 ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்து.. அதற்குபின் வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் வசூலித்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment