எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரிய ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு..

Thursday, May 28, 2020




பணி நீட்டிப்பு பெற்று 31.5.2020 ஓய்வு பெறுபவர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தக் கோரிய வழக்கில், வழக்குத் தொடுத்த 31.5.2020ல் ஓய்வு பெற உள்ளவர்களை பணிவிடுவிப்பு செய்ய இடைக்காலத் தடை*

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரிய ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு..

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்வயதை 59 ஆக உயர்த்திபிறப்பித்த அரசாணையின்பலனை ஏப்ரல் 30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும்வழங்கக்கோரி வழக்குதொடர்ந்த ஆசிரியர்களைபணியிலிருந்து விடுவிக்கஇடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை அல்லிநகரம் அரசுமேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்செய்த மனு: நான் 30.4.2020-ல்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். எனக்கு 31.5.2020வரை பணி நீட்டிப்புவழங்கப்பட்டது. இந்நிலையில்அரசு ஊழியர்களின் ஓய்வுவயதை 58-ல் இருந்து 59 வரைஉயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல்அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும்ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்பயன்பெறுவர். என்னைப்போல்ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணிநீட்டிப்பு பெற்றவர்களுக்குபலனில்லை. இந்த அரசாணைஆசிரியர்கள் மத்தியில்பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.
எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும்ஆசிரியர்கள், அரசுஊழியர்களுக்கு மட்டும் ஓய்வுபெறும் வயதை 59 ஆகஉயர்த்தும் அரசாணையை ரத்துசெய்து 30.4.2020-ல் ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வு வயதுநீட்டிப்பு சலுகை வழங்கஉத்தரவிட வேண்டும். அதுவரைஎன்னை மே 31-ல்பணியிலிருந்து விடுவிக்க தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில்கூறப்பட்டிருந்தது.
இதேபோல் விருதுநகர்மாவட்டம் வன்னியம்பட்டிஉயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜவஹர், விருதுநகர்முத்துராமலிங்கபுரம் சிவசங்கர்,செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர்கோபாலகிருஷ்ணன்ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிஜெ.நிஷாபானு இன்றுவிசாரித்தார். மனுதாரர்கள்தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் அஜ்மல்கான்,ஓய்வு பெற்றவர்களுக்கானஓய்வூதிய விவரங்கள்இதுவரை அனுப்பப்படவில்லை.மனுதாரர்களின் ஓய்வு வரம்புமார்ச், ஏப்ரல் மாதங்களாகஇருப்பினும், தற்போதுவரைபணியில் உள்ளனர்.அப்படியிருக்கும் போது ஓய்வுவயது அதிகரிப்பு அரசாணைமனுதாரர்களுக்கு பொருந்தாதுஎன்பது ஏற்க முடியாததுஎன்றார்.
அரசுத்தரப்பில், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம்கோரப்பட்டது.
அப்போது குறுக்கிட்டஅஜ்மல்கான், ஜூன் மாதம்தொடங்க 2 நாள் மட்டுமேஉள்ளது. இதனால் அதற்குமுன்பு மனுதாரர்களைபணியிலிருந்து விடுவிக்கஅதிக வாய்ப்புள்ளது. எனவேமனுதாரர்கள் 5 பேரையும்பணியிலிருந்து விடுவிக்க தடைவிதிக்க வேண்டும் என்றார்.
இதையேற்று மனுதாரர்கள் 5பேரையும் பணியிலிருந்துவிடுவிக்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பில் பதில்மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டுவிசாரணையை ஜூன் 3-ம்தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One