1939-ம் ஆண்டு வட அமெரிக்காவில் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். மற்ற நிறங்களைக் காட்டிலும் மஞ்சள் சட்டென்று கண்களுக்குப் புலப்படும்.
சிவப்பு நிறத்தைவிட மஞ்சள் நிறம் 1.24 மடங்கு வேகமாகக் கண்களுக்குப் புலப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Dr. Frank w. Cyr நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துகள் இருள் விலகாத அதிகாலை நேரத்திலும் பளிச்சென்று கண்களுக்குத் தெரியும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார். பல்வேறு நிபுணர்களும் இதுகுறித்து விவாதித்தனர். பிறகு பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை மஞ்சள் நிறத்தில் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. பிறகு கனடாவிலும் மஞ்சள் பேருந்துகள் கொண்டுவரப்பட்டன. காலப்போக்கில் பிற நாடுகளிலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறிவிட்டன. இதனால் டாக்டர் ஃப்ராங்க், ‘மஞ்சள் பேருந்துகளின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.
No comments:
Post a Comment