மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48 வைத்து நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வணிக வழக்கங்களும் முற்றிலுமாக மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகள், மற்றும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் நாட்டின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா காரணமாக நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை சமாளிக்க அரசு ஊழியர்கள் சம்பளத்தை 30% குறைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "மத்திய அரசின் அனைத்து துறைகளையும் சார்ந்த ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு முன்மொழிதலும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யான, அடிப்படையற்ற தகவல்கள்" என்று விளக்கம் அளித்துள்ளது
No comments:
Post a Comment