ஜூலையில், பள்ளிகளில் வகுப்பு துவங்க அனுமதிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மெட்ரிக், மேல்நிலை பள்ளிகள் சங்கங்களின் சார்பில், பள்ளி கல்வி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள மனு: தமிழகம் முழுதும், பள்ளிகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்து, ஜூலையில் வகுப்புகள் துவங்க அனுமதிக்க வேண்டும். அதற்கு முன், ஜூன், 15 முதல், 30க்குள், புத்தகம், நோட்டு வழங்குவது, கல்வி கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. மாணவர்கள் முக கவசம், கையுறை அணிந்து வரலாம்.
பள்ளிகளில், 'சானிடைசர்' தரப்பட்டு, அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பள்ளியில் நுழைவதற்கு முன், கால்களை கழுவி விட்டு வரவும் ஏற்பாடு செய்வோம்.சமூக இடைவெளி பின்பற்றப்படும். ஜூலையில் இருந்து, தினசரி வகுப்புகள் நடத்த அனுமதிக்கலாம். கொரோனா தாக்கம் இருந்தால், மாணவர்கள் சுழற்சி முறையில், பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment