சேலத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செஞ்சிலுவை தினம் அனுசரிக்கப்பட்டது. ரெட் கிராஸ் துணைத்தலைவர் அணில்,மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.உறுப்பினர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், ரெட் கிராஸ் தலைவருமான திரு.இராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரெட் கிராஸ் கொடியை ஏற்றினார். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக அனைவரையும் கன்வீனர் பிரபாகர் வரவேற்று அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் மே 8 ம் தேதி இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.என கூறினார் .பின்னர் மாவட்ட ஆட்சியர் ரெட் கிராஸ் அமைப்பு மூலம் திருநங்கைகளுக்கு அரிசி,சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் .இந்நிகழ்வில் இருபால் ஜே.ஆர்.சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் உலக செஞ்சிலுவை தினம் கொண்டாட்டம்
Saturday, May 9, 2020

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment