தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மே 5, 2020) தமிழக மக்களிடையே உரையாற்றவுள்ளதாக அறிவித்து இருந்தார். இதன் அடிப்படையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய தமிழக முதல்வர் பேசிய சமயத்தில், கரோனா நோயின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள கூறி அறிவுறுத்தினார்.
நாட்டு மக்களிடையே முதல்வர் பேசியவாதவது, தலைமை செயலாளர் சார்பாக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 குழுக்கள் மேற்படி அமைக்கப்பட்டு, தீவிர கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களின் அடிப்படையில், அதிகாரிகள் களத்தில் நேரடியாக சென்று நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
அனைத்துமாவட்ட ஆட்சியர்களிடமும் 4 முறை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பு உள்ள பகுதியில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில், நோய்பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகிறது. கரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற காவல் துறை சார்பாகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகள், தங்களின் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு, தேவையான ஆலோசனை மற்றும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைகளின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து தீர்க்கப்பட்டு வருகிறது.
சென்னை மக்கள்தொகை அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு குறுகலான பகுதியில் மக்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்றனர். பொதுக்கழிப்பறைகளை மக்கள் அதிகளவு உபயோகம் செய்து வருகின்றனர். இதனால் கரோனா அதிகளவு பரவியுள்ளது. பொதுக்கழிப்பறைகள் மற்றும் கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் சுத்தம் செய்தல் பலமுறை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடமாடும் பரிசோதனை மையமானது மக்கள் வசித்து வரும் இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டு வருகிறது. பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு நோய் அறிகுறி இருந்தால், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டலவாரியாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 4 ஆயிரம் படுக்கை வசதியுடன் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. மத்திய குழு தமிழகத்தின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளது. கரோனா பரிசோதனை மையம் தமிழகத்தில் 50 இருக்கிறது.
இதனால் மக்கள் நோயின் தாக்கம் அதிகளவு இருக்கிறது என்பதை கண்டு அஞ்ச வேண்டாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கரோனா பரிசோதனை ஆய்வகம் அதிகளவு உள்ளதால், நோய்ப்பாதிப்பு உடனுக்குடன் தெரியவருகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, பல்வேறு தொழில்கள் துவங்கவுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் நபர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்கள் சொந்த மாநிலம் செல்ல வழிவகை செய்யப்படும். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 50 ஆயிரம் பேரை மொத்தமாக அழைத்து செல்ல முடியாது... கொடுக்கப்படும் விபரத்தின் அடிப்படையில், தகுந்த தேதி மற்றும் நேரத்திற்கு அரசே அழைத்து சென்று இரயிலில் செல்ல வழிவகை செய்யும். அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஒரேநேரத்தில் அழைத்து செல்ல முற்படுவது ஆபத்தானது. இன்னும் ஒரு வாரத்திற்க்குள் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல வழிவகை செய்யப்படும்.
பொதுமக்கள் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைத்து, கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுங்கள்... முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடியுங்கள்.. தமிழகத்தில் மக்கள் பட்டினியாக இருக்க கூடாது என்று அம்மா உணவகம் மூலமாக 7 இலட்சம் மக்களுக்கு தினமும் உணவு வழங்ப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரேஷனில் இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கும் இலவசமாக ரேஷனில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
மக்கள் அரசிற்கு தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும். பொருட்களை வாங்கும் சமயத்தில் அல்லது பொது இடங்களுக்கு செல்லும் சமயத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பட்சத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க இயலும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment