எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு CEO-ன் முக்கிய அறிவிப்பு.

Saturday, May 16, 2020




அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் தத்தமது பள்ளி வளாகம் மற்றும் அனைத்து வகுப்பறைகளும் மே19-ம் தேதிக்குள்  முழுமையாக சுத்தம்  செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பத்தாம் வகுப்பை கொண்டிருக்கும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதால் அனைத்து வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகம் முழுமையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்படயிருப்பதால், தேர்வு அறைகள் மற்றும் பள்ளி வளாகம் முழுமையிலும் தூய்மை பணி நடைபெற்று இருப்பதை உறுதி செய்திடவும் கண்காணிப்பதற்கும் கல்வித்துறை அலுவலர்கள்(CEO, DEO, DIs, BEOs) அனைத்து பள்ளிகளையும் திடீர் ஆய்வு செய்ய இருக்கின்றார்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதால் அனைத்து அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு எழுத வரும் மாணாக்கர்கள் கொராணா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் சானிடைசர்/சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட
இருப்பதால் பள்ளிகளில் உள்ள சிறுநீர் கழிப்பிடம்/ கழிவறைகள் முற்றிலும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு மையத்திற்குள் வரும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள்
(மாணாக்கர்கள்) அனைவரும்
முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

மே 20 முதல் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் தங்களது பள்ளியைச் சார்ந்த அனைத்து வகை ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை நாள்தோறும் பள்ளிக்கு வருகைபுரியச் செய்வதோடு வருகைப்பதிவேட்டில் இரு நேரமும் கையொப்பமிட செய்திட வேண்டும்.

பள்ளிகளில், ஆசிரியர்-ஆசிரியைகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பள்ளிகளில் அமர்ந்து  பணியில் ஈடுபடவேண்டும்.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் மற்றும்ஆசிரிய-ஆசிரியைகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு பணியிலும் மற்றும் மேல்நிலைக் கல்வி விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இது தேர்வுப் பணிக்காலம் என்பதால் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் அவசியம் இல்லாமல் எவ்வகை விடுப்பு துய்பதற்கும்  அனுமதி இல்லை என்ற விவரமும் தெரியப்படுத்தப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து தேர்வு சார்ந்த சுற்றறிக்கைகள்,   செயல்முறைகள் மற்றும் தேர்வுப் பணி ஒதுக்கீட்டு ஆணைகளானது மின்னஞ்சல் வாயிலாகவும் புலனக்குழு வாயிலாகவும் அவ்வப்போது அனுப்பப்படும் என்பதால் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மிகுந்த விழிப்புடனும் கவனத்துடனும் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

 முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுகின்ற தேர்வு பணி ஒதுக்கீடு  சார்ந்த ஆணை விவரங்களை காலம் தாழ்த்தாது உடனடியாக தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு தெரிவித்து கையொப்பம் பெற்று  பள்ளி அலுவலக கோப்பில் வைத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிகளில் நடைபெறுகின்ற அனைத்து அன்றாட பணிகள், தேர்வு  சார்ந்த பணிகள் மற்றும் பிற வகை பணிகளில் சமூக இடைவெளி முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பத்தாம் வகுப்பு பிரிவு ஆசிரியர்-ஆசிரியைகள் தத்தமது மாணாக்கர்களை தொடர்புகொண்டு தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு சார்ந்த விவரங்களை உடனடியாக தெளிவாக தெரிவித்திட தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் அறிவுறுத்திட வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களது கீழ்காணும் விவரங்களுடன் தனி பதிவேடு ஒன்று அவசியம் பராமரித்திட வேண்டும்.
மாணாக்கர் பெயர்,  தந்தை பெயர், பிறந்த தேதி, வயது, வீட்டுக்கதவிலக்கம், வார்டு எண்,  தெருப்பெயர், வசிக்கும் பகுதி (ஊர்) ஆகிய விபரங்களை விடுதல் இன்றி தெளிவாக எழுதி பராமரித்திட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணாக்கர்  எனில், இப்பதிவேட்டில் அடையாளத்திற்காக அவரது பெயரினை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு வைத்துக்கொள்ளலாம்.

- CHIEF EDUCATION OFFICER, Tiruvannamalai

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One