10ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்க கோரிய வழக்கை வியாழக்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட், வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தேர்வை ஒத்தி வைக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் கூறியதாவது: லட்சகணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரு மாதம் தள்ளி வைக்காமல் ஏன் அவசரம் காட்டப்படுகிறது. மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது
9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், போலீசார், வருவாய்த்துறையினரை இக்கட்டுக்கு ஆளாக்குவது ஏன்? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது.ஊரடங்கு காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன உள்ளது என நினைக்கிறீர்கள்? பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், முதல்வர் - அமைச்சர் சந்தித்தது தொடர்பான நிலவரங்களை விளக்க வேண்டும். என்ன முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.அரசு தலைமை வழக்கறிஞர் இன்று ஆஜராக முடியாது என்பதால், வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, டாஸ்மாக் கடையை திறப்பது போல், பத்தாம் வகுப்பு தேர்வு கிடையாது. இரண்டும் வெவ்வேறானவை.
பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூன் 15ல் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. கொரோனா பரவல் குறைந்த பின் தான் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர். அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர்இதனையடுத்து பிற்பகல் ஆஜரான அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, தேர்வு குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 10ம் வகுப்பு தேர்வு முக்கியமான தேர்வு. இதனை 11 மாநிலங்கள் நடத்தி முடித்துவிட்டன. வரும் நாட்களில், கொரோனா பாதிப்பு 2 லட்சமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான நேரமாகும். தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளதால், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
இதனால், தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.மத்திய அரசு அறிவித்த விழகாட்டுதலை பின்பற்றி தேர்வு நடத்தப்படும். தேர்வை நடத்த தேவையான பதுகாப்பு நடவடிக்கை அரசு மேற்கொண்டுள்ளது. தேர்வு மையங்ளில் கிருமிநாசினி தெளித்தல் மாணவர்களுக்கு மாஸ்க் வழ்குவது வழிமுறைகள் கடைபிடிக்கப்படும். கொரோனா பாதிப்பின் உச்சம் அக்டோபர், நவம்பரில் அதிகமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர் எனக்கூறப்பட்டது.அனுமதி வேண்டும்தொடர்ந்து அவர் வாதாடுகையில், 10ம் வகுப்பை தேர்வை நடத்த இதுவே சரியான நேரம்.
கொரோனா பாதிப்பை பொறுத்தவரை அபாயகரமான சூழல் இல்லை. தேர்வை தள்ளி வைத்து நடத்துவதால் தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் அமையும். பேரழிவாக அமையும். இதனால், தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.யார் பொறுப்புஇதனை தொடர்ந்து நீதிபதிகள், தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பு?
மாணவர் இறக்க நேரிட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? வாழ்வை இழந்த பிறகு, யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிர் தொடர்புடைய விஷயம் என்பதால், உடனடியாக தேர்வு நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை. 9 லட்சம் மாணவர்கள் 4 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆபத்தில் உள்ளது குறித்து கவலை இல்லையா? 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள். பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பெற்றோரும் சிந்திக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், அரசு கூடுதலாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். பத்தாம் வகுப்பு தொடர்பாக பிற வழக்குகளுடன் விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment