நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் கூறியுள்ளார் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட ஊரடங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் பள்ளி, கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை இருந்து வருகிறது
இதனிடையே , கொரோனா பாதிப்பு மண்டலங்களை கருத்தில்
கொண்டு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங் களில் உள்ள பள்ளிக் கல்லூரிகளை திறப்பது என்றும் சமூக பரவலை கடைபி டித்து, ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது என்று கூறப்பட்டது.
எனினும் அத்தகைய முடிவுகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், ஆகஸ்ட் 15-ந் தேதிக்கு பிறகு பள்ளிகள் தொடங்கப்படும். அப்போதைய சூழல் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
பல்கலைக்கழகங்ளும் ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வு முடிவுகள் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்வு முடிவுகள் அனைத்தும் ஒன்றாக வெளியிடப்படும். நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியும், ஜே.இ.இ.
தேர்வு ஜூலை 18 முதல் ம் தேதி வரை நடத்தப்படும் இவ்வாறு கூறினார்
No comments:
Post a Comment