எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வெறும் 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து..! தமிழக மருத்துவரின் கண்டுபிடிப்பை விரைந்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Saturday, June 13, 2020




கொரோனாவுக்கு வெறும் இரண்டு ரூபாயில் மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறும் கிருஷ்ணகிரி மருத்துவரின் மனுவை உடனே விசாரித்து விரைந்து உத்தரவு பிறப்பிக்கும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமா பரவி வரும் கொரோனா காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றவும், மருந்து கண்டுபிடிக்கவும் பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஊத்தங்கரையை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் என்ற மருந்தை தான் கண்டுபிடித்திருப்பதாகவும், இந்த மருந்து சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்களை உடல் செல்களில் நுழைய விடாமல் தடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த மருந்து கண்டுபிடிப்பு சம்மந்தமான ஆராய்ச்சி கட்டூரைகளை இந்திய மருத்தவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பியுள்ள நிலையியல் தனது மனு மீதான எந்த ஒரு உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை எனவும், தனது மனுவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் உத்தரவிடக்கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், தான் கண்டுபிடித்துள்ள இந்த மருந்து ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் வெறும் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக விலையே கொண்டது எனவும் மருத்துவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவரின் மனுவை விரைந்து பரிசிலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One