21 ஜூன் 2020 அன்று நிகழும் சூரிய கிரகணத்தை இந்திய முழுவதிலும் காணலாம். ஊரடங்கில் வீட்டில் இருந்தாலும் நம்மால் இதை பாதுகாப்பாக பார்த்து ரசிக்க முடியும்.
கீழே உள்ள செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.alokm.solareclipse
அதில் உள்ள இந்திய வரைபடத்தில் உங்கள் ஊரை தேர்ந்தெடுத்தால் உங்கள் ஊரில் எப்போது கிரகணம் தெரியும், எவ்வளவு சதவீதம் சூரியன் மறையும் என்ற தகவல்கள் கிடைக்கும்.
செயலியின் இடது மூலையில் உள்ள மெனுவில் பாதுகாப்பாக கிரகணம் பார்ப்பது எப்படி, viewing methods போன்ற விவரங்களைக் காணலாம்.
ஜல்லிக்கரண்டி, வெறும் கைவிரல்கள் இவற்றின் மூலமாக கூட கிரகணத்தை கண்டு ரசிக்க முடியும்.
தமிழ்நாடு முழுவதும் 21.06.2020 ஞாயிறு காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டு ரசியுங்கள்!
அன்புடன்
அறிவியல் பிரச்சாரம் உபகுழு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
No comments:
Post a Comment