எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கொரோனா தடுப்பு பணியில் 400 ஆசிரியர்கள் நியமனம்!

Tuesday, June 23, 2020




 சென்னையில்‌ கரோனா வைரஸ்‌ பரவலை தடுக்கும்‌ விதமாக 1.2 லட்சம்‌ வீடுகள்‌ தனிமைப்படுத்‌ பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர்‌ கோ.பிரகாஷ்‌ நேற்று செய்தியாளர்களிடம்‌ கூறியதாவ.

சென்னையில்‌ கரோனா தொற்று உள்ளவர்களுடன்‌ தொடர்‌பில்‌ இருந்தவர்கள்‌, மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று‌ திரும்‌பியவர்கள்‌, வெளி மாநிலம் மற்றும்‌ வெளி நாடுகளில்‌ இருந்து வந்தவர்கள்‌ வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்‌. அவ்வாறு ! லட்சத்து 20 ஆயிரம்‌ பேர் தனிமைப்படுத்தப்‌ பட்டுள்ளன.  அவர்களின்‌ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும்‌, வெளியில்‌ செல்வதை தடுக்கவும்‌ 4,500 தன்னார்வலர்கள்‌ நியமிக்கப்‌ பட்டுள்ளனர்‌.

லேசான கரோனா அறிகுறி உள்ளவர்கள்‌, அறிகுறி இல்லாமல்‌ கரோனா தொற்று உள்ளவர்களை தங்கவைத்து சிகிச்சை அளிக்க 17 அிபிரத்து 500 படுக்கைகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும்‌ சுமார்‌ 8 ஆயிரம்‌ படுக்கை வசதிகள்‌ அண்ணா பல்கலைக்கழகம்‌, சென்னை ஐஐடி உள்ளிட்ட இடங்‌ களில்‌ ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது முழு ஊரடங்கு அமல்‌ படுத்தப்பட்ட நிலையில்‌ 90 சதவீத மக்களின்‌ நடமாட்டம்‌ குறைந்துள்‌ ளது. அதனால்‌ இந்த ஊரடங்கு முடியும்போது சென்னையில்‌ தொற்று பெரிய அளவில்‌ குறைய வாய்ப்புள்ளது. ரியர்கள்‌ இவ்வாறு அவர்‌ கூறினார்‌.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை கண்காணிக்க வார்டு அளவில்‌ தன்னார்வலர்கள்‌, மாநகராட்சி அதிகாரிகள்‌, போலீஸார்‌ நியமிக்‌ கப்பட்டுள்ளனர்‌. தன்னார்வலர்கள்‌ முறையாக வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில்‌ ஈடுபடுகின்‌ றனாரா என களத்துக்கு சென்று ஆய்வு செய்யவும்‌, வார்டு அளவில்‌ அனைத்து அலுவலர்களையும்‌ ஒருங்கிணைக்கவும்‌ மாநகராட்சி முழுவதும்‌ உள்ள 200 வார்டுகளில்‌ தலா 2 மாநகராட்சிப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ வீதம்‌ 400 பேர்‌ நியமிக்கப்பட்டுள்ளள்‌. இவர்கள்‌. தங்கள்‌ ஆய்வு விவரங்களை மாநகராட்சியின்‌ கரோனா தொடர்‌ பான இணையதளத்தில்‌ தனமும்‌ பதிவேற்றவும்‌ மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One