எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினம் ஒரு புத்தகம் - நெளிமோதிரம்

Wednesday, June 10, 2020




தினம் ஒரு புத்தகம் - நெளிமோதிரம்

நெளிமோதிரம்.

பாலகுமாரன்

ஆசிரியத் தோழமையால் நான் படிப்பதற்காக வழங்கப்பட்ட பாலகுமாரன் புத்தகங்களில் ஒன்று.

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் தன் அன்பால் சாமர்த்தியத்தால் அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தும் கதை இது

 நூலிலிருந்து

உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கின்ற மகத்தான பரிசு எது தெரியுமா?  பொறுப்பை சுமக்கின்ற வலிமையும்.  சுதந்திர சிறகுகளும்.

நல்ல விருந்து என்பது,  என்னால் பரிமாறப்பட்ட உணவுகள் நல்ல முறையில் ஜீரணமாகி,  நல்ல வலுவையும்,  குளுமையான புத்தியையும்,  மீண்டும் என் கை சோறுக்கு ஆசைப்படுகின்றேன் நினைவையும் தரும்படி வேண்டிக் கொண்டு பரிமாறுவதுதான்.

கோபத்தை வெல்வது கடினம். கோபம் இல்லாத வரைக்கும் வேகம் விவேகம். கோபம் வந்தால் அது விபரீதம்.

நல்ல ஆண்கள் எல்லாம் பெண்களுக்கு குழந்தை போலத்தான். அவர்களை சீராட்ட பெண்களுக்கு ஆசை வந்துவிடும்.

 புத்தி குளுமையானால் வேலையில் நிதானம் இருக்கும். நிதானம் தெளிவின் அஸ்திவாரம். தெளிவு வெற்றியின் ரகசியம் .

உழைப்புக்கு அர்த்தம் வேண்டுமெனில் அது நீ மட்டும் உண்பதில்லை. உன் குடும்பத்திற்கும்,  உற்றார் உறவினருக்கும் கொடுப்பதில் இருக்கிறது.

மனைவியால் நேசிக்க படுகிற புருஷன்,  குழந்தையால் ஆராதிக்கப் படுகிற தகப்பன்,  பெற்றோரால் கொண்டாடப்படுகிற பிள்ளை,  இவைதான் ஆணின் லட்சணம்.

காசும் கனிவும் ஒரு குடும்பத்தின் வலுமிக்க கைகள்.

கேட்கிற பக்குவம்  வந்தால்தான் யோசிக்கிற பக்குவம் வரும்.

எல்லா சோதனைகளும் நம்மை வலுவாக்குவதற்கே வந்திருக்கின்றன. சோதனைகளை தாங்குவோம்.
வலிமை பெறுவோம்.

காதலும் கருணையும் வெவ்வேறானது அல்ல உண்மையான காதல் ஒருபோதும் கெடுதல் செய்யாது.

தோழமை என்பது தனிப்பிறவி அல்ல. மனதை புரிந்து கொண்டு உதவி செய்வது.

உலகில் நல்ல புத்தியும்,  நல்ல அன்பும் வேண்டும் என்பதை சொல்லும் நாவல்.

தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One