உலகிலேயே மிகவும் பரிசுத்தமான இடம் என்றால் அது அன்றும் இன்றும் என்றும் கோயில் தான். நாம் கோயிலுக்குச் செல்லும் போது உடல் சுத்தமாகத் தான் செல்வோம். மேலும் அங்கு சென்று வந்தவுடன் மனதும் சுத்தமாகி விடும். கோயிலில் இருந்து திரும்பும் போது மழை வந்துவிட்டது. சேற்றிலும், சகதியிலும் நாம் கால் வைத்துவிட்டோம் என்றால் காலை கழுவிக் கொள்ளலாம் தவறு ஒன்றும் இல்லை. அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் நாம் வெறும் காலில் கோயில் பிரகாரம் முழுவதும் சுற்றும் பொழுது நம் காலில் உள்ள நுண்துளைகள் தூண்டப்பட்டு இரத்தம் நம் உடல் முழுவதும் பாயும். இது ஒரு நல்ல உடற்பயிற்சி. நாம்
கால்களை கழுவும் போது அச்சக்தி வீணடிக்கப்படுவதால் முன்னோர்கள் கோயிலுக்கு சென்று வந்தவுடன் கால்களை கழுவக் கூடாது என்றார்கள். கோயிலுக்கு சென்று வந்தவுடன் நாம் கால்களை கழுவினால் நமது புண்ணியம் எல்லாம் போய்விடும் என்பது நம்மை பயமுறுத்தும்.
No comments:
Post a Comment