எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

'இன்டர்நெட்'டுக்காக கூரையில் ஏறினார்: மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

Sunday, June 7, 2020




கல்லுாரி நடத்தும், 'ஆன்லைன்' வகுப்பின் பாடங்கள் தெளிவாக தெரிவதற்காக, வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்த மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.அந்த மாணவிக்கு, மொபைல் போன் நிறுவனங்கள், போட்டி போட்டு உதவி செய்தன.கேரளா, மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல்லை சேர்ந்தவர் நமிதா. கல்லுாரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறார். கொரோனாவால் கல்லுாரிகள் மூடப்பட்டதால், ஜூன், 1 முதல், ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. நமிதாவின் வீடு தாழ்வான பகுதியில் இருப்பதால், இன்டர்நெட் இணைப்பு சரி வர கிடைக்காமல், ஆன்லைன் பாடங்களில் பங்கேற்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. குடும்பத்தினர் உதவியுடன், வீட்டின் கூரை மீது ஏறியபோது, இன்டர்நெட் இணைப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து, கூரை மேல் அமர்ந்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படித்தார். இதை, அவரின் சகோதரி நயனா, படம் பிடித்து, 'வாட்ஸ்ஆப்' சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அது, பலருக்கும், 'வைரலாக' பரவியது. மாணவியில் படிப்பு ஆர்வத்தை, பல தரப்பினரும் பாராட்டினர். அவருக்கு, தெளிவான இணையதள இணைப்பு வழங்க, மொபைல் போன் மற்றும் இணையதள நிறுவனங்கள், போட்டி போட்டு முன்வந்தன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One