அனுப்புநர்:
ஆ.இராமு
மாநிலத் தலைவர்
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
DRPGTA
7373761517
பெறுநர்,
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்
பள்ளிக்கல்வி இயக்ககம்
சென்னை.6
பொருள்:
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியிலோ ஜூன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது 2020 ஜூன் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காரணத்தால் பள்ளி திறக்கும் தேதி இன்னும் உறுதி செய்யப்படாத சூழல் உள்ளது.
அதே நேரத்தில் கடந்த மே மாதம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்,
தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று உள்ளனர். இதனால் பள்ளிகள் திறக்கப்பட கூடிய சூழல் ஏற்படும்போது பல பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களும் தலைமை ஆசிரியர் காலி பணியிடங் களும் இருப்பதால் மாணவர் நலன் பாதிக்காத வகையில் தமிழக அரசு உடனடியாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு,
பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் இந்த சூழ்நிலையிலும் 11,12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் நலனுக்காகவும்,அரசின் வேண்டுகோளுக்கு இணங்கியும் கடந்த மே மாத கடைசி வாரத்தில் இருந்து நடப்பு ஜூன்மாத கடைசி வாரம் வரை தமிழகம் முழுவதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து போதிய சமூக இடைவெளியுடன் போதிய முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூலை மாதத்தில் இணையவழி மூலம் போதிய சமூக இடைவெளியுடன் போதிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு செயல்பாடுகளுடன் நடத்த முன்வர வேண்டும் .
மேலும் ஒவ்வொரு ஆசிரியரும் தற்போது பணிபுரியும் பள்ளியில் கலந்தாய்வு நடைபெற உள்ள தேதிக்கு முன் ஒரு ஆண்டு பணிபுரிந்து இருந்தாலே,ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்பதை முக்கிய விதியாக வெளியிட வேண்டும் . மேலும் நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பிறகே நிர்வாக மாறுதல் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்பட வேண்டும். காலிப்பணியிடங்கள் உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.
No comments:
Post a Comment