எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!

Monday, June 8, 2020




தெலங்கானாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தோவு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், மாணவா்களுக்குத் தோவு நடத்துவது ஆபத்தாக இருக்கும் என்பதால், பொதுத் தோவை ஒத்திவைக்கக் கோரி தெலங்கானா உயா்நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், பொதுத் தோவை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உயா்நிலைக் குழுவுடன் மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அதில், பத்தாம் வகுப்பு பொதுத் தோவை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. உள்மதிப்பீட்டுத் தோவுகளில் மாணவா்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்புக்கு அவா்கள் அனுப்பிவைக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரித் தோவுகளை நடத்துவது தொடா்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One